நீ தான் என் சுவாசம்...


1
எத்தனையோ காதல்கள்
என்மேல் - எனக்கு 
உன்மேல் மட்டுமே காதல்..

2
முட்கள் நிறைந்த
என் வாழ்க்கையில்
நீ மட்டும் எப்படி ரோஜாவாக...??

3
நீல வானத்தில்
நிலவினை போல - என்
நீள கனவினில் நீயடி..

4
காதல் தேசத்து
அகதி நான்..
உன் காதலன் என்று
கைது செய்தாய்..

சிறை எனக்கு அல்ல
உனக்கு
என் இதயத்தில்...!!

5
சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
உன் கண்களில் தான்....

6
என் கிறுக்கலை கவிதை
என்பவள் நீ...
கவிதைக்குள் இருப்பவளும் நீ...

7
உந்தன் புன்னகையே
எந்தன் முகவரி....
அதனால் தான் என்னவோ

நான் தொலையாமல்
இருக்கிறேன்....

8
இரவினில் கூட
உன்னைப்பார்க்கிறேன்...
கண்களால் அல்ல
கனவுகளால்....

9
என் ஆதிமுதல்
அந்தம் வரை
உனக்கு அத்துப்படி
அது எப்படி...

என் ரகசிய உலகத்தின்
அரசியா நீ?

10
உன் வியர்வையை
துடைத்துவிடு...
தங்கத்தில் இருந்து முத்தென்று
தங்க வியாபாரிகள்
வரப்போகிறார்கள்...

11
பூக்கள் உன்னை பார்த்து
பேசிக்கொள்கின்றன

தினம் நாம் பூத்து
உதிர்கிறோம்
இவள் உதட்டில்
உதிர்ந்தால்
பூத்துவிடலாம் என்று..

12
சூரியனை மட்டும்
சுற்றும்
சூரிய காந்தி போல்
உன்னை மட்டுமே
நான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்...

13
காதல் மோட்சம்
அடைவதற்காய்
என்னிடம் உள்ள
ஒரே மந்திரம்....

உன் பெயர் தான்...

14
உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்று கண்டு பிடிப்பதற்குள் 
கூடிக்கொண்டே போகிறது

உன்மேலான என் காதல்....

15
இதயத்தை தொலைத்துவிட்டு 
தேடினேன்
கிடைக்கவில்லை...
இதயமே என்னை
தேட தொடன்கியது...

உன் காதல் வந்தபிறகு..

16
காகிதங்களை காலம்
தின்றுவிடும் என்பதால்..

உன் நினைவுகள் எல்லாம்

என் மன டைரியிலே...

17
தினமும் இரவில்
தோற்றுப்போகிறேன்...

கனவில் வரும் - உன் 
நினைவு போராட்டங்களுடன் 
போராடி...

18 
உனக்கு நான்...
எனக்கு நீ...
நமக்கு நாம் ..

இதில் உனக்கு அதிகம்
எது பிடிக்கும்...!!

19
என் கவிதைகளை நீ
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்

என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...

20
நீ
தனிமையை விரும்புகிறாய்
நான்
தனிமைப்படுத்தப்படுகிறேன்..
நாம்
சேர்ந்ததால் தனிமை
தனிமையாகி விட்டது போலும்...

21
காற்றின் உருவம்
தெரிவதில்லை...
உன் காதலில்
குறையை கண்டதில்லை...

22
என் வார்த்தைகள்
எல்லாம் மௌனவிரதம்
இருக்கின்றன..

நாம் கண்களால் 
கதைத்து விடுவதால்...

23
உன் உதடுகளில் தான்
என் புன்னகை
மலர்கிறது...

கண்களில் கண்ணீர்
வராதவரை....

24
எனக்கு மனைவியாக
(வர) தட்சணை
எவ்வளவு கேட்பாய்...??

25
முத்திரையாக
இதயத்தை ஒட்டி...

காதல் கடிதங்களாக
கவிதைகளை அனுப்புகிறேன்....

உன் பதில் என்ன
காதல் தானே...?


2 comments:

siva said...

love it and its so nice

அன்புதோழி said...

Lovely

Post a Comment

கருத்துக்களுக்கு