மாலைநேர மழைத்துளி

ஏதாவது வித்தியாசமா எழுதுவம் என்று நினைத்தேன். தூக்கம் வந்த படியால் சின்ன பதிவு போடலாம் என்பதற்காய் பதினைந்து  நிமிடத்தில் எழுதியது இந்த கவிதை (போன்ற ஒன்று), திரையில் மலர்ந்த படங்களில்  என் ஞாபகத்தில் இருந்தவற்றை பயன்படுத்தியுள்ளேன்.. 

என்னவளே 
ஆசையில் ஓர் கடிதம்..

நானே என்னுள் இல்லை.
இனியவளே 
கண்டேன் காதலை 
நினைத்தேன் வந்தாய் 
மறுபடியும் ஒரு காதல்  
எப்படி மனசுக்குள் வந்தாய்..

தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன்
காதல் சொல்ல வந்தேன் 
காதல் கொண்டேன்...

யாரடி நீ மோகினி
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஆனந்த பூங்காற்றே 
அலை பாயுதே
ஆசைகள்..
கண்ட நாள் முதல்

அன்பே ஆருயிரே
எனக்கு 20 உனக்கு 18 
என் சுவாசக் காற்றே 
பூவெல்லாம் கேட்டுப்பார் 
முப்பொழுதும் உன் கற்பனையே

செல்லமே 
அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறது
உயிரே 
உன்னை பாக்கணும் போல இருக்கு..
கண்ணாமூச்சி ஏனடா 
பிரியமானவளே
தவமாய் தவமிருந்து 
ராமன் தேடிய சீதை நீ..
மயக்கம் என்ன
மைனா 
நெஞ்யிருக்கும் வரை 
நீயே என் காதலி 

எங்கேயும் காதல் 
சொல்ல சொல்ல இனிக்கும்
வாரணம் ஆயிரம் உன்
மந்திரப் புன்னகை...

அழகி 
ஆசை வைச்சேன் 
ஒரு கூடை முத்தம் 
தா
எங்கேயும் எப்போதும் 
நினைத்தாலே இனிக்கும்
தொட்டால் பூ மலரும்..
துள்ளத மனமும் துள்ளும்....

உச்சி தனை முகர்ந்தால்
சர்வமும் ரோஜாவனம் 
கண்களாலே கைது செய் 
அன்பே
உன்னை பார்த்தாலே பரவசம் 
கன்னத்தில் முத்தமிட்டால்
உன்னாலே 
நெஞ்சில் ஜில் ஜில்

நான் அவன் இல்லை 
அஞ்சாதே
உனக்காக என் காதல்- 
நிலவே வா 
உன்னாலே உன்னாலே
காதல் சடு குடு
வாகை சூட வா 
ஜெயம் உண்டு பயம் இல்லை
நீ வேணும்டா செல்லம் 
விண்ணை தாண்டி வருவாயா 
என் செந்தூரப் பூவே..

பிரியமுடன்
காதலன் 
காதல் கிறுக்கன்
(தமிழ் நிலா )

மறக்காமல் உங்கள் கருத்துகளை கூறுங்கள்...

உன்னை நீ காதலி ....



கவிதை எழுத
ஆசையுடன் உட்கார்ந்தேன் 
வார்த்தைகள் வருவதாய் இல்லை,


கவிஞனுக்கு தான்
கவிதை வருமாம்.. இது
காதலி சொன்னது..

கவிஞன் ஆக
காதலிக்க வேண்டுமாம்- இது
நண்பி சொன்னது...

யாரை நான் காதலித்தால்
கவிதை எழுதலாம் என்றேன்..
உன்னை நீ காதலி என்றாள்
மனைவி...!!! 

by sanjay தமிழ்நிலா

விழியீர்ப்பு விசை



புவியீர்ப்பு விசையால்
நான் திடமாக நடந்தேன்
உன் விழியீர்ப்பு விசையால்
நான் தடுமாறி விழுந்தேன்
நியுட்டனின் மூன்றம் விதியது
உண்மையானது....
உன் காதலால் எனக்கு
காதல் வந்தது...

அன்பே
நிலவில் நடப்பது
பறப்பது போன்றது..
உன் காதல் எனக்கு
அதைவிட பெரியது,,

நீரில் பொருளின்
எடை குறையும்...
காதலில் மட்டும்
இதயம் கனக்கும்...
கவலைகள் போனது
அதன் அளவது சந்தோஷ
பொழுதுகள் ஆனது..

காற்று எங்கும் பரவுதல்
போலே - காதல் என்னில்....
பரவுகிறது..

உயிரினை கொல்லும்
நோயினைப்போலே
தினம் தினம் எனை
கொல்கின்றது ..

தடுப்பு மருந்தும் இல்லை
தடுக்க விருப்பம் இல்லை...
நரம்பில் ஓடும் குருதியை போலே
நான் வழுக்கி ஓடுறேன்
இந்த உலகத்தின் மேலே..

உதட்டுக்கும் உதட்டுக்கும் தாக்கம்
அதை அறிந்திட நினைக்கும்
பாடம் இது (காதல்) அணுக்கள்
மட்டும் உடம்பில் எத்தனை
அதை அறிந்திட துடிக்கும்
பருவ தேடல் இது காதல் ....

ஒக்சிஜன் இல்லா நீரும்..கற்றும்
இங்கேது.. சூரியன் இன்றி
சந்திரனில் ஒளியேது..
நீ இல்லாமல் நான் எது.....

தமிழ் நிலா

என்னவளே...



என்னவளே...
காதலில் தானடி
சொன்னாலும் 
தோல்வி..
சொல்லாவிட்டலும் 
தோல்வி..
அதை இங்கு 
சொல்கையிலே 
காதல் கனக்கும்,
சொன்னபின்னாலே
கண்ணீர் சுரக்கும்,
செத்து செத்து
இதயம் பிழைக்கும்,
சாவதை மட்டும்
வெண்மனம் நினைக்கும் ,
இது தான் காதலின்
சாபமோ..
இனி காணாமல் போகும் 
ஆணிணமோ....??

உன் நினைவு...



உதிக்கும் சூரியன்...
உயிரணுவில் ஒரு மாற்றம்...

காலம் தப்பாத மழை...
செடிகளின் அணிவகுப்பு...

வீதியில் புகை மூட்டம்...
புல்வெளியில் படரும் பனி...

அலையடிக்கும் குளம்...
மொட்டவிள்கும் தாமரை...

சுழன்று வீசும் காற்று...
மணம் பரப்பும் தோட்டத்து மல்லிகை...

அசையும் மேகம்...
இசையமைக்கும் வானத்து பட்சிகள்...

இலையுதிர்க்கும் மரங்கள்...
நடைபயிலும் வனத்து மிருகங்கள்...

கடக்கும் காலை...
கரையும் காலம்...

என் மெய் தீண்டும் விழியாலே...

துடிக்கும் இதயம், அதில்
துங்கும் உன் நினைவு...

தமிழ் நிலா 

நண்பர்களுக்கு வணக்கம்...!!

எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், தமிழ் நிலா, சஞ்சய் எனும் பெயர்களில் எழுதுவதை, அவற்றின் பெயர்களை நீக்கி தங்களுடயதகவே இடுகிறார்கள்.. என்னால் பெயர் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில உத்தமர்கள் மட்டுமே என்னை கேட்டு அதுவும் அதே பெயருடன் பதிகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மேலும் நான் சில நண்பர்களை வினாவ அவர்கள் தொடர்பை துண்டிக்கிறார்கள்.. ஏன் என புரியவில்லை.. அவர்களை பெயர் இட்டு குறிப்பிட விரும்ப வில்லை. "காதல் சாரம்" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு விடயம் அநேகரின் முகப்புத்தக பகுதியில் காண்கிறேன். அவற்றில் அநேகமானவற்றில் பெயர் நீக்கப்பட்டுள்ளது..

இதை எங்கு கண்டாலும் தெரியப்படுத்தவும்...

முகபுத்தக நெருங்கிய நண்பர்கள் இனிமேல் கவிதைகளை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளர்கள். அத்துடன் இவாறு நடப்பதை தெரியப்படுத்திய நண்பர்களுக்கும்.. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கி விமர்சனங்கள் தந்து ஊக்குவித்த அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...

நன்றி


காதல் சாரம்...

யாரை நீ காதலித்தாயோ 
அவள் வேறொருவனை காதலித்தாள்.
யாரை நீ காதலிக்கின்றாயோ
அவள் வேறொருவனை காதலிக்கின்றாள்.
யாரை நீ காதலிக்க போகிறாயோ
அவளும் வேறோருவனையே காதலித்திருப்பாள்.
உன்னுடையது எதை இழந்தாய்
ஏன் தாடி வளர்க்கிறாய்
யாரை நீ கொண்டு வந்தாய்
அவளை நீ காதலிக்க
யாருக்கு நீ காதலை சொன்னாய்
அவள் உன்னை காதலிக்க
யார் உன்னை காதலித்தாள் 
நீ மீண்டும் காதலிக்காமல் இருக்க
காதலை எங்கிருந்து பெற்றாய் 
அது இங்கேயே பெறப்பட்டது
யார் என்று உன் காதலியோ
அவள் நாளை
மற்றொருவனுடையதாகின்றாள் 
மற்றொரு நாள் அவள் வேறொருவனுடையதாகின்றாள்.

இதுவே காதலின் நியதியும்

சாரமும் ஆகும்.

தமிழ் நிலா

2005/07/16

என் காதல்...!!

.

காதல் என்றும் புனிதமானது
என்பதை நான் அறிவேன்
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன்..!!

ஷஜகான் செய்த தப்பினால்
தாஜ்மகால் உருவானது
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகின்றது...!!

வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்ததடி
ஆசைகள் பல இருந்தும்
அவையும் மடிந்ததடி...!!

சொல்லி வருவதில்லை 
காதல்...
சொல்ல முடிவதில்லை 
காதல்....
சொல்ல மொழியும் இல்லை
காதல்....
சொன்னாலும் உனக்கு 
புரியவில்லை
என் காதல்.....!!

by - தமிழ் நிலா

வெள்ளி மலரே.....



வெள்ளி மலரே எந்தன் உயிரே
வில்லாய் நீ மாறி காதல்
அம்பை வீசினாய்....உன்
அன்பாலே நான் வாழ்க்கையின்
அர்த்தம் உணர்ந்தேனே...

அன்பே என் நெஞ்சில் எல்லாம்
நீ  வந்த காலின் தடம்
நிலவே நீ வந்தால் போதும்
தடைகள் கூட படியாய் மாறுமடி.

என் கண்ணீர் துடைக்க
கைகள் கேட்டேன் மேல்.தாங்கி
தோழாய் நின்றாய் காதலியே..
என் விழியோரம் வழியும் கண்ணீர் 
உன் கண்ணோடும் வழிகிறதே
உறக்க மறுக்கும் கண்கள் கூட
தாயென உன் மடி தேடுகிறதே....

உயிரே உன் நெஞ்சுக்குள்ளே.
என் மூச்சு உள்ளதடி
பெண்னே உன் கண்ணுக்குள்ளே
என் உயிர் தான் வாழுதடி..
கண்ணே உன் கண்மணிக்குள்ளே
சுத்துதடி என் உலகம்
பெண்னே உன் பொன் விழி தானடி.
எந்தன் பூவுலகம்.....

என்..நெஞ்சோடு..காதலியாய்
நீ..மட்டும் போதுமடி –அன்பே
என் காதல் தானாய் வளருமடி...

தமிழ் நிலா

காற்றுவெளி June 2011 

இரவும் நிலவும்...


நிலவில் இரவா, இரவில் நிலவா
தெரியவில்லை
கருமை அழகா பொன் மேனி அழகா
புரியவில்லை

நிலவினை பெண் என
பார்த்திடும் போது
அவள் கூந்தலின் கருமை
இரவாய் போனதுவோ....

ஒரு நிலவால் என் வாழ்வில்
இரவா தெரியவில்லை
தமிழ் நிலவால் என் உயிருக்கு
ஒளியா புரியவில்லை....

அவள் கண்கள் இரண்டும்
நிலவாய் போனால் கண்
இமைகள் தான் இரவாகும்,
பொன் மகள் என்னை பாராவிட்டால்
என் வாழ்வு முழுதும் இரவாகும்..

தமிழ் நிலா

என் தடங்கள்...!!!

உன்னை நினைக்கும் போது
ஏற்படும் அழகிய உணர்வுகள்
அன்பே என் வாழ்க்கையின்
இனிய பொழுதுகள்....!!

இனிய பொழுதுகள் அனைத்தும்
என் இரவின் கனவுகள்
அந்த கனவுகளின் நினைவுகள்
அதிகாலை உளறல்கள்...!!

அந்த உளறல்களின் இனிய
எழுத்து வடிவங்களே உயிரே
என் கவிதைகள் .....!!
இவை அனைத்தும் நீ
வந்து போனதுக்கான தடங்கள்...

தமிழ் நிலா

+9477@காதல்.com

நான் வாழும் உலகத்தில்
நீ வாழ்ந்தும் - உன்னை
பாக்க முடியவில்லை....
என்னிடம் phone இருந்தும்
call பண்ண உன்
number இல்லை.....

மேகம் மண்ணுக்கு வர
முடிவதில்லை - மழையை
அனுப்புகிறது தூதாக...
நான் வர முடியவில்லை
நீ ஒரு mail ஆவது
அனுப்பேண்டீ எனக்கு.....

புயல் அடித்து புல்லு
சாய்ந்திட மாட்டாது - அன்பே
நீ வெறுத்தாலும் காதல் சாகாது...
facebook இல் நீ இருந்தும்
என்னால் chat பண்ண
முடியவில்லை....

தண்டவாளம் சேருமா...??
நீ என்னை நெனைக்காம - என்
காதல் ஜெயிக்குமா???
ஒரு கடிதம் போடகூட
உன் address ய் நீ
தரவும் இல்லை...

by - தமிழ் நிலா

வா வா அன்பே .....

வா வா அன்பே
வா வா அருகிலே
உன் வருகைக்காய்
காத்திருக்கிறேன்
நான் உருகியே....

தினம் நட்சத்திரம்
எண்ணியே கழிந்தது
நாட்களே..
நெஞ்சில் உந்தன்
காதல் முட்டியே
வழிந்ததே....!!

உன் புகைப்படம் பார்த்து
பார்த்து தொலைந்தது என்
நொடிகளே...
நிலவினை பார்த்து
பார்த்து கழிந்தது என்
இரவுகள்....

உன் கண்ணில் என்ன
வைத்தாய்... அது மாயம்
செய்யுதே... உன்
நெஞ்சில் என்னை வைத்தாய்
காதலில் மூச்சு
முட்டுதே..... !!!!

நீ தரும் முத்தத்தால்
அந்த சத்தத்தால் என்
இதயம் துடிக்குதே...
தினம் வரும் கனவினால்
கண்கள் யுத்தத்தால். ...
என் உயிர் வாழுதே..

உன் அன்பால் தனிமையை
மறக்கிறேன்...
உன் நினைவால் தனிமையை
இழக்கிறேன்..
நீ வந்தால் தானே நான்
நானாவேன்.... வா வா அன்பே...

by- தமிழ் நிலா... 

என் காதல்....!!


காதல் என்றும் புனிதமானது
நான் அறிவேன் நன்கு...
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன் ...!!

சாஜகான் செய்த தப்பினால்
தாஜ் மஹால் உருவானது..
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகிறது...!!

வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்தது...
ஆசைகள் பல இருந்தும்,
அவையும் மடிந்தது....!!

சொல்லி வருவதில்லை காதல்
சொல்ல முடிவதில்லை காதல்
சொல்ல மொழியும் இல்லை ...
சொன்னாலும் உனக்கு புரியவில்லை
என் காதல்......
by: தமிழ் நிலா

நீ போன பிறகு ..





ஆலம் விழுதுகள் போல
உன் நினைவு படர்ந்து விட
அவை என்னுள் தினமும்
கவிதையாகின்றன.....!!

உனால் பௌர்ணமியான
என் வாழ்வு......
உன் பிரிவால் அமாவாசை
ஆகிவிட்டதே...

உன் வருகைன் பின்னாவது
என் சோலையில் பூ வரும்
என்று நினைத்தேன்.... அது
மொட்டோடு கருகிவிட்டது...!!

என் வாழ்க்கையில் என்றுமே
வசந்தங்கள் வந்ததில்லை...!!
எல்லா நாட்களுமே எனக்கு
இலையுதிர் காலம் அன்பே...
நீ போன பிறகு.....!!!
by தமிழ் நிலாsanjay

நீ இல்லை....!!


கட்டாந்தரையான என் இதயத்தில்
காதல் என்ற செடியை வைத்து
உன் பார்வையால் நீர் ஊற்றி 
உரமூட்டிவளர விட்டாய்.... !!

செடி வளர்ந்து மரம் வந்த போது..
மொட்டு வந்து தலை அசைத்த போது 
நீ இல்லை....!! பூ பூக்கும் போது 
மரத்தையே காணவில்லை....!!

நீ வைத்தது முள் செடி என்று 
தெரியாமல் என் இதயம்...
முட்களால் கிழித்து கொண்டது...
ஒவ்வொரு நொடிகளும்...!!

ஏதோ ஒன்றை பெற்று விட்டேன் 
என்று எண்ண தோன்றியது அப்போது 
அது காதல் அல்ல காதல் வலியே
என்று உணர்ந்தேன் இப்போது...!!
By- தமிழ் நிலா sanjay

நீ வந்து விடு....


பஞ்சு போன்ற எந்தன் நெஞ்சில்
காதல் தீயை பற்ற வைத்துவிட்டாய்...
காதல் தீ எரியும் போது நீ
அணைக்க வரவில்லையே...!!

உன் சிரிப்போலிகளால் என்
நரம்புகள் அதிருதடி...!!
உன் பேச்சால் என்
இரத்தம் உறையுதடி... !!

எனை கொல்லாமல் 
கொல்லும் எந்தன் உயிர் காதலியே...
காத்திருப்புகள் உனக்கு பிடிக்கும்
என்றால் அதையும் செய்ய
காத்திருக்கிறேன்...!!!

ஆனால் இதயத்தில் வளரும் 
காதல் பறவை 
சிறகு முளைத்து பறக்க முன்
வந்துவிடு என்னிடம்...!! 
By- தமிழ் நிலா sanjay

என்னிடமுமா...???


கண்களை மூடினேன் எதிரில் நீ...
கண்களை திறந்தேன் இதயத்தில் நீ...

உன்னை மறப்பதற்கு எனக்கு 
இயலவில்லை...
என்னை ஏற்பதற்கு உனக்கு
சம்மதம் இல்லை....!!

என்னை மறக்கவேண்டும் என்று நீ
எண்ணும் போதெல்லாம் 
என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்...!!
என் இதயத்துக்குள் புகுந்து... 
உணர்வுகளை கிளறுகிறாய்....
காதலின் தவிப்புகளை எனக்கு மட்டும் 
சொந்தமாக்கிவிட்டாய் ...

யார் காதலையும் நீ
ஏற்க மறுத்ததால் தான்
உன்னில் காதல் வந்தது...!!
அதற்காக என் காதலிலுமா???? 
by தமிழ் நிலா sanjay

என் கவியே...


என் உயிர் கவிதை
நீ புது கவிதை,
எந்தன் தமிழ் கவிதை...
நீ ஒரு பெண்கவிதை..

உன்னை எழுதும் கவிஞன்
ஒரு உயிர் கவிஞன்..
இந்த புது கவிஞன்..
நான் தமிழ் கவிஞன்...!!!

கவி எழுதும் உன் கவிஞன்..
செந்தமிழ் எழுதும் கலைஞன்.
உன்னை ரசிக்கும் கிறுக்கன்..

உன் தமிழ் விரும்பும்..
என் கவி விரும்பும் ..
உன்னை விரும்பும்...
உன் காதலன்... நான்... 
by ...தமிழ் நிலா

நீ இல்லை....!!


எனக்காக வாழ
நீயும் இல்லை...
என்னோடு வாழ
நீ எங்கே இல்லை...

உன்னோடு பேச
வார்த்தைகள் இல்லை...
உன்னோடு பேச
எனக்கு வழியும் இல்லை..

உன்னை எழுத
மொழிகள் இல்லை...
மொழிகள் எழுத
நான் கவிஞன் இல்லை..

உன்னை பாட
கவிகள் இல்லை...
கவிகள் பாட
நான் கலைஞன் இல்லை...

உன்னை ரசிக்க
விருப்பம் இல்லை..
விரும்பி ரசிக்க
நான் கணவன் இல்லை....
by - தமிழ் நிலா

யாரோ நீ என் கனவோடு......??


தினமும் வருகிறாய்
எனை தொடுகிறாய்
உன் இதழ்களால் என்
முகம் துடைக்கிறாய்....!!

உள்ளம் திறக்கிறாய்
அந்த வெக்கம் போக்கினாய்
என் போர்வைக்குள்ளே நீ
பதுங்கியே படுக்கிறாய்...!!

இதயத்தில் நடக்கிறாய்
நெஞ்சினில் குதிக்கிறாய்
நீ போன பின்னும்
எங்கும் தெரிகிறாய்.....!!!

விழிகளில் ஆடுகிறாய்
வார்த்தைகளால் பாடுகிறாய்
நான் எழுந்து விட
மறைந்து போகிறாய்.....!!
by - தமிழ் நிலா

மாலை நேரத்து மழை..!!


மார்கழி தோற்று போகும்
அந்த கார் காலம்....
மழையில் மிதக்கும்
மாலை நேரம்....!!
இரண்டாலும் அழகுறும்
என் நிலாக்கூடம்..!!

வீதியில் வெள்ளத்தின்
தேரோட்டம்....!!
வானத்தில் மேகத்தின்
நீராட்டம் ... !!
என் காதலி கண்களில்
ஒரு போராட்டம்....!!
அவள் கால்களோ மண்ணில்
மயிலாட்டம்....!!

எனை மறந்தே
போனேன்..
அவள் அழகில்
நனைந்தே போனேன்..
மழையால் நான்
உருகி போனேன்..
அவள் ஸ்பரிசத்துக்காய்
உறைந்தே போனேன்..

மழையோ என் தவிப்பை
புரிந்து கொண்டாள்..
மேகமோ தன்னவனை
முட்டி கொண்டாள்...
சத்தத்தால் என்னவளோ
கட்டிக் கொண்டாள்...
தன் உதட்டால் என்
உதட்டை தடவியே
சென்றாள்.....!!
by - தமிழ் நிலா

நான் வந்தேன்.. நீ போகிறாய்...!


பேசி பழகிட
உருகியே வந்தேன்,
கானல் நீராய்
மறைந்து போகிறாய்...!!

கைவிசி நடந்திட
நெருங்கியே வந்தேன்,
நிலவினை போல
ஓடியே போகிறாய்....!!

சேர்ந்து சுற்றிட
விரும்பியே வந்தேன்,
தென்றலாய் எனை
விட்டு போகிறாய்....!!

அன்பினில் மிதந்திட
இறங்கியே வந்தேன்,
கடலினை போல
அமிழ்த்தியே போகிறாய்..!!

என் காதலி உனிடம்
வெதும்பியே வந்தேன்,
சூரியனாய் எனை
சுட்டு போகிறாய்...!!
BY- தமிழ் நிலா Sanjay

நதியலையில் ஆடும் நிலவு....!!


உன்னை பார்த்து காதல் கொள்ள
நெஞ்சம் ஏங்குதே...!!
நீ என்னை பார்த்து ஓடும் போது..
கண்கள் கூசுதே....!!

நதி அலையினில் ஆடிடும்
நிலவினை போலே அசைந்தே
போகிறாய்......!!
தினம் கனவினில் வந்து என்
நெஞ்சின் மேலே தவழ்ந்தே
போகிறாய்....!!

நிலவினை தொடரும்
அலையினை போல நானும்
வருகிறேன்....!!
உன் விரலினை பிடித்து
காதல் கொண்டிட இரவும்
நினைக்கிறேன்....!!

நான் நினைக்கிற பொழுதினில்
நினைவாய் வந்து மறைந்தே
போகிறாய்...!!
என் கண்களின் ஓரம்
கண்ணீராக நீயும் வழிந்தே
போகிறாய்.....!!!
by-தமிழ் நிலா

உன்னை இழந்தால்...!!!


அறியாத வயதினில்
உன்னை அறிந்து விட்டேன்...
புரியாத வயதினில்
அழகிய காதலை புரிந்து விட்டேன்..
உணராத வயதினில்
என் மனதில் வலிகளை
உணர்ந்து விட்டேன்....!!

உன்னை பார்க்கும் வழிகளை
தொலைத்து விட்டேன்...
உன் அருகினில் வாழும் வரத்தை
இழந்து விட்டேன்....!!!
உன் கரங்கள் பிடிக்கும் போராட்டத்தில்
தோற்று விட்டேன்.....!!

நீ இருந்தும் நினைவுடனே
வாழ்ந்து விட்டேன்...
உன் பாதத்தில் மண்ணாய்
விழுந்து விட்டேன்...
உன்னை இழந்தால் நான்
இறந்திடுவேன்.....!!!
BY- தமிழ் நிலா Sanjay

காதல் கொலைகாரி..!!


என் காதலில்
இனிய விஷம் - என்
காதல் தேவதை
உன் நினைவுகளே...!!!
என்னை சிறுக சிறுக
கொல்வதால்.... நீயும்
காதல் கொலைகாரி..!!
நீ தருவது ஆயுள்
தண்டனை என்றால்...
உன் இதயத்தில் நான்
காதல் கைதியாகிறேன்..
உன் கையாலே
மரணம் என்றால்...
அது கூட எனக்கு சுகமே...
எதனையும்
ஏற்றுக்கொள்கிறேன்..
கண்கள் செய்த
தப்பினால்....
உன்னை காதலித்த
குற்றத்துக்காக....!!
கண்ணீருடன்.....!!!
S.N.Sanjay