தொலைந்து விட்டாள்தொலைந்து விட்டாள்
என்னவள்..
தேடவிட்டாள் அவளிடமே

காதல் கலந்த முகங்களில்
கவலை படர்ந்திருந்தது...
நான் வாழும் இதயத்தில்
சோகம் தவழ்ந்திருந்தது...

என்னவள் இவள் அல்ல...

கொஞ்சும் வார்த்தைகள்
குத்தி நின்றது...
கூரான பார்வைகள்
கோவித்து கொண்டது...

இவளும் அவள் அல்ல...

கொலிசு ஒலிக்கவில்லை..
வளையல் ஓசையும் கேக்கவில்லை..
கூந்தல் வாசம் மணக்கவில்லை..
எப்படி தேடுவது..
தேடி தொலைகின்றேன்...
எங்குமே இல்லை...அவள்..
எங்கோ போய்விட்டாள்...

கடைசியாக..
புன்னகை நிறத்தில்
சந்தோஷ ஆடை அணிந்திருந்தால்...
கையில் சில வேளைகளில்
என் இதயத்தை வைத்திருப்பாள்...

கண்டவர்கள்..
என் உயிருடன்
தொடர்பு கொள்ளுங்கள்...
விலை உலகானாலும் தருகிறேன்..

தமிழ்நிலா