இறுதி அத்தியாயம்....

(எனது முதல் கவிதை...)


ரம்மியமான காலை நேரம்,
ஊரோ கலகலத்த வண்ணம்.....
வீடோ சோகத்தில்...!!

பெற்றோர் என்னருகில்...
உடன் பிறந்தோர் என் அருகில்...
நண்பர்களும் என்னருகில்.....!!

என் மனதில் ஓடிய படம் என்ன...??
யோசித்தேன்... பலமுறை...
தெரிந்து கொண்டேன் காரணத்தை....!!

ஓஒஹ் ...!! நான் உயிரற்ற
வெற்றுடம்பாய்,
வெள்ளை துணியின் கீழ்.....!!

தேடினேன் அவளை
காணமுடியவில்லை.....
அவள் தான் என் காதலி....!!

எனை மறந்தேன்.... அவளை
மறக்க முயன்றேன்....
முடியவில்லை.....!!!
ஒரு வார்த்தை என்னுள்
மீண்டு கொண்டிருந்தது....

அது என்ன வார்த்தை....??
யோசிக்க நினைத்தேன்
அதற்குள் தூக்கி செல்லப்படுவதை
உணர்ந்தேன்....
இறுதி அத்தியாயம் நோக்கி........!!!

தமிழ்நிலா  30/april/2005