உன்னை பற்றி கவிதை எழுத என்று ....
பெண்ணாக இருந்த உன்னை
காதலி ஆக்க நினைத்த எனக்கு
நீ அளித்த பரிசு கண்ணீர்...?
நான் அளிக்கும் பரிசு கவிதை....!!

தேவதாஸ் இருந்தால் உன்னை பாடி
ஆயிரம் கவிதை தருவான்...
பெண்ணே உன்னை யாசிக்கிறேன் 
என் உயிர் உள்ளவரை....!!


சோலையாய் இருந்த என் மனம்
மாறியது உன் பிரிவுகளால்
புழுதிகிளம்பும் பாலைவனமாய்...
கண்களை கூட நீர் வற்றியதால்...

எழுதா பேனா போல் இருந்த என்
வாழ்க்கைக்கு மைபோல நீ வந்த கணம் 
உணரவில்லை பின்விளைவை.. 
உணர்ந்தேன்... மையாக வந்தது......
உன்னை பற்றி எழுத என்று ....