காதல் ஓரு.....
காதல் ஓரு உணர்வு…
அதை  உணராதவர் இங்கில்லை…
காதல் ஓரு காற்று…
அதன் ஸ்பரிசம் கிடைக்காதவர்
எங்கும் இல்லை…..

காதல் ஓரு வானம்
அதன் எல்லை புரியாது…..
காதல் ஓரு கடல்
அதன் ஆழம் தெரியாது…
காதல் ஓரு நெருப்பு
பிரியும் போது அது புரியும்…
காதல் ஓரு நிலா
சேர்ந்தால் தண்மை தெரியும்..
காதல் ஓரு கண்ணாடி..
உடைந்தால் பொருந்தாது…
காதல் ஓரு தண்ணீர்
பிரிந்தால் சேர்ந்து விடும்….
காதல் ஓரு காட்டாறு
அதை அடக்கிட முடியாது….
காதல் ஓரு பூகம்பம்
அழிவின்றி திரும்பாது….

காதல் என்றும் கடவுள்
அதை பார்த்திடவும் முடியாது….
காதல் ஓரு வலி
அது முடிந்தால் தொடராது…..