என் அன்பே..
உன்னை பார்க்கும் முன்
அழகான பல பெண்களை
பார்த்திருக்கிறேன்......ஆனால்
உன்னை பார்த்த பின்பு...
எந்த பெண்ணும் அழகாக
தெரியவில்லை....!!!

என் இதயத்தை
எத்தனையோ தென்றல்கள்
வருடி போயிருக்கின்றன...
இப்போது உன் சுவாச காற்று
மட்டுமே தென்றலாகிவிட்டது ...!!!

கலர் கலரா எத்தனையோ
கனவுகள் கண்டபடி இருந்தேன்...
ஆனால் இப்போது..
நீ மட்டுமே கனவில்
வந்துபோகிறாய்.....!!

ஆனால் உன்னை
காதலிக்கும் முன்
எந்த பெண்ணையும்
காதலிக்கவில்லை ....
நீயோ எனை ஏனோ
ஏற்றுக் கொள்ளவில்லை ....!!

காரணம் கேட்டேன்
கிடைக்கவில்லை....!!!