ஆனால் நீ.......????நான் வருணித்த நிலவு
உன் நெற்றிப்பொட்டு...!!
நான் வாசித்த கவிதைகள்
உன் கண் புருவங்கள்...!!
நான் அகப்பட்ட பொறி
உன் கண்கள்.....!!
நான் தடுமாறிய புயல்
உன் சுவாசம்....!!
நான் குடித்த தேனிலும் இனியது
உன் இதழ்கள்....!!
நான் கேட்ட இன்னிசை
உன் சிரிப்பு...!!
நான் விழுந்த பள்ளம்
உன் கன்னக் குழி...!!
நான் வியந்த ஓவியம்
உன் முகம்....!!
நான் ரசித்த சிற்பம்
உன் உருவம்....!!
நான் படிக்க நினைத்த காவியம் நீ.....
கவிஞ்ஞனை எழுதும் கவிதை நீ...

மொத்தத்தில் எனக்காக 
பிரமன் படைத்த 
நடமாடும் தாஜ் மஹால் நீ....!!

தமிழ் நிலா