என்ன சொல்ல போகிறாய்.....????உனது கண்கள்
எனது கண்களுடன்
என்ன பேசியது......??
இதயம் திறந்து கொண்டதே.....
உன் கண்கள் எனை 
பார்த்தது உண்மைதான் - ஆனால் 
உள்வாங்கவில்லையே...

உனது இதழ்கள்
எனை பார்த்ததும்
மெல்ல விரிந்து கொண்டன....!!
உயிரில் அலை அடித்தது....
நீ சிரித்தது உண்மை தான்..
உன் உதடுகளுக்கே தெரியாமல்.....
வெறும் அரும்பாய்...

என் உயிர்
உன் நிழல் என தொடர....
உன் மௌனமோ கொல்கிறது....
என் இதயத்துடன்
உன் இதயம் இணையுமோ..
துடிக்கிறது நெஞ்சம்.....!!!!

நான் மணமேடைக்கு போவதும்....
மலர்ச்சாலைக்கு போவதும் - உன்
கையில் தான் உள்ளதடி...

இல்லை எனின் ..
உன் கல்யாண பூக்கள் - என்
கல்லறையை அலங்கரிக்கட்டும்....!!

Sanjay தமிழ்நிலா