என் கனவில்....
அல்லிக்கு நிலவை பிடிக்கும் என்றாய்
தாமரைக்கு சூரியனை பிடிக்கும் என்றாய்
வண்டுக்கு பூவை பிடிக்கும் என்றாய்
உனக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை.....?

நிலவுக்கு காதல் சூரியன் வரும் வரை...
சூரியனுக்கு காதல் இரவு வரும் வரை...
வண்டுக்கு காதல் தேன் எடுக்கும் வரை....
உன்மேல் வந்த காதலோ உயிர் உள்ளவரை....!!

சூரியனை கேட்டா நிலா வந்தது...??
இரவை கேட்டா சூரியன் வந்தது...??
பூவை கேட்டா வண்டு தேன் எடுத்தது...??
என்னை கேட்டா உன்மீது காதல் வந்தது...??

நிலவின் ஒளியை முகத்திற்கும்
இரவின் கருமையை கூந்தலுக்கும்
தாமரை நிறத்தை இதளிலும் கொண்டு
வரைந்த ஓவியம் நீ.. இதனாலா
இரவில் மட்டும் வருகிறாய் என் கனவில்...

sanjay தமிழ்நிலா