எந்தன் ஓவியமே...
இந்த உலகின் வண்ண
பேசும் ஓவியம்...நீ..
என் காதல் ஓவியம்....!!
என் காதலியே நீ....

பிரமன் வரைந்து வைத்த
உயிரோவியம் நீ......
என் உயிரை உறைய வைத்த
உணர்வோவியம் நீ.....!!

உன்னை நான் வரைய
போகிறேன்.....
என் மனம் எனும் துரிகையால்....
இதயம் எனும் காகிதத்தில்....

நீ உயிர் பெறுவாயா....???

உன்னில் ஒட்டிக்கொள்ள
வர்ணங்களே போட்டி இடுகின்றன....
உயிரே... உனக்கான வர்ணத்தை
நீயே தருவாயா.....????

உன் உதட்டில் இருந்து
சிவப்பு நிறமும்...
உன் உடலில் இருந்து
மஞ்சள் நிறமும்...
உன் கூந்தலில் இருந்து
கருமை நிறமும்....
உள்ளத்தில் இருந்து
பால் நிறமும்....

உயிரே.....
உன்னை வரைந்து விட்டேன்
ஏன் இன்னும் உயிர்பெறவில்லை.......