வரங்களே...சாபங்கள் ஆனதால்...




ரோஜாவை நேசிக்க தெரிந்த
எனக்கு அதில்
உள்ள முட்கள் நினைவிற்கு
வரவில்லையே...!!!!
மழையே முகாரி பாடினால் ....

சிலநேரங்களில் மௌனம்
மன்னிப்பு....!!
சிலநேரங்களில்
சம்மதம்....!!
இன்னும் சிலநேரங்களில்
தண்டனை.....????

நின்று போனது வார்த்தை....
உடைந்து போனது வாழ்க்கை....
வெளிச்சத்தை
விரட்டிவிட்டு.....இருட்டுடன்
குருட்டு வாழ்க்கை
நடத்துகிறேன்.......!!!
விடியல் வருமா எனக்கு.....!!

என் பாழாப்போன
பற்றை காட்டில்
துளசி செடியா முளைத்தாய்.....
மின்மினியா சுற்றிய எனை
சூரியன் ஆக்கினாய்.....!!
நீ மழையில் நனைக்கிறாய்
நன் கண்ணீரில் மிதக்கிறேன்....???

வரங்களே...சாபங்கள் ஆனால்
தவங்கள் எதற்காக..... ???