
அது ஒரு காலை நேரம்...
நானோ பேருந்தின் ஜன்னல் ஓரம்...
வேகமா போகும் பேருந்தின் உள்ளே நான்
தென்றலாய் மிதந்து கொண்டிருந்தேன்...
கற்பனையில் உறைந்து போன என்னை..
நிசப்த்த அலைவரிசையில் திடிரென..
பாட்டு போல் பேருந்தில் ஒரு ஒலி..
கலைத்து போட்டது கற்பனையை....
உள்ளே நிமிர்ந்து பார்த்தபோது
சிதைந்து போனது என் சிந்தனை....
இமைக்க மறந்த எனது கண்கள் சொல்லியது...
நீ தேடிய தேவதை இவள் தான் என்று....
புன்னகையால் என்னை சிதைத்தவளை
சிறை எடுக்க கண்களை மூடி திறந்தபோது,
காணவில்லை எந்தன் காரிகையை...
தென்றலில் வந்த அவள் தலைமுடி கூறியது....
அவள் போய்விட்டாள் என்று........

