என் தமிழே...!!இரவில பார்த்தேன்,
கனவில பார்த்தேன்,
இதயத்தில் பார்த்தேன்,
உயிரே உன்னை நான்
என்னில் பார்த்தேனே....!!!

சிரிக்கையில் பார்த்தேன்,
அழுகையில் பார்த்தேன்,
நிற்கையில் பார்த்தேன்,
வெக்கத்தில் உன் நாணலை
நான் பார்த்தேனே.....!!

தாயென பார்த்தேன்,
தோழி நீ என பார்த்தேன்,
காதலில் பார்த்தேன்,
தாரமாக உன்னை
நான் பார்த்தேனே.....!!

உன்னை தினம் பார்த்தேன்,
முழுதாய் பார்த்தேன்,
கவிதையில் பார்த்தேன்,
குறையே இல்லாத என்
தமிழாய் நான் பார்த்தேனே....!!