வருவாளா....?????கண்ணீருடன் கலந்த
என் கவிதைக்கு.
காதல் கலந்த சில
வரிகள் மட்டுமே,
காயப்பட்ட இதயத்தை
காய வைக்கிறது.....!!

கனவிலே கவிதை
வரும் போதெல்லாம்,
கண்ணீருடன் வாழும்
கண்களுக்காக....
காதலுடன்
காதலியும் வந்து போகிறாள்......!!

கனவில வந்த
காரிகையோ. ....
என் கவிதைய தன்
கவிதை என்கிறாள்....!
கனக்கும் இதயத்தின்
காதல் தெரியாமல்....!!

கவிதைகளுக்கு பரிசு
கன்னத்தில் முத்தம் என்றால்....
கன்னத்தில் முத்தம் தந்து
காதினில் ஒன்று கூறினால்...
"தினமும் வருவேன் " என்று..

கைகளில் கவிதையுடன்...
காத்து நிக்கிறேன்....
அவள் வருவது
கவிதைகளுக்காக
இல்லாவிட்டலும் ....
கொஞ்சி கொஞ்சி
பேசிட.....
என் கனவுக் காதலி...
வருவாளா....?????