என் காதல் இறக்கவில்லை.....!!ஆண்டுகள் போனாலும்
என் காதல்
குறையவில்லை....!!
அழகின் உருவமே
நீ என்னை
புரியவில்லை.....!!!
இதயத்தில் உண்டான
வலிகளை
உணரவில்லை.....!!

இருவரும் ஒன்றாய்
பிறக்கவில்லை...!!
இருந்தும் ஒன்றாய்
வசிக்கவில்லை...!!
உன்னை பார்க்காமல்
வாழ்க்கையில்லை....!!

என்னை பார்த்தால் உனக்கு
பிடிக்கவில்லை...!!
உன்னை மறக்க என்னால்
முடியவில்லை...!!
ஏனோ தான் இது என்று
தெரியவில்லை...!!

காதல் இது என்றேன் நீ
ஏற்கவில்லை...!!
காலம் கரைந்தும் நீ
கனியவில்லை...!!
இதயம் இறந்தும் என்
காதல் இறக்கவில்லை.....!!