உன்னை இழந்தால்...!!!


அறியாத வயதினில்
உன்னை அறிந்து விட்டேன்...
புரியாத வயதினில் அழகிய 
காதலை புரிந்து விட்டேன்..
உணராத வயதினில் மனதில் 
வலிகளை உணர்ந்து விட்டேன்....!!

உன்னை பார்க்கும் வழிகளை
தொலைத்து விட்டேன்...
உன் அருகினில் வாழும் வரத்தை
இழந்து விட்டேன்....!!!
உன் கரங்கள் பிடிக்கும் போராட்டத்தில்
தோற்று விட்டேன்.....!!

நீ இருந்தும் நினைவுடனே
வாழ்ந்து விட்டேன்...
உன் பாதத்தில் மண்ணாய்
விழுந்து விட்டேன்...
உன்னை இழந்தால் நான்
இறந்திடுவேன்.....!!!