நான் வந்தேன்.. நீ போகிறாய்...!பேசி பழகிட
உருகியே வந்தேன்,
கானல் நீராய்
மறைந்து போகிறாய்...!!

கைவிசி நடந்திட
நெருங்கியே வந்தேன்,
நிலவினை போல
ஓடியே போகிறாய்....!!

சேர்ந்து சுற்றிட
விரும்பியே வந்தேன்,
தென்றலாய் எனை
விட்டு போகிறாய்....!!

அன்பினில் மிதந்திட
இறங்கியே வந்தேன்,
கடலினை போல
அமிழ்த்தியே போகிறாய்..!!

என் காதலி உனிடம்
வெதும்பியே வந்தேன்,
சூரியனாய் எனை
சுட்டு போகிறாய்...!!