மாலை நேரத்து மழை..!!மார்கழி தோற்று போகும்
அந்த கார் காலம்....
மழையில் மிதக்கும்
மாலை நேரம்....!!
இரண்டாலும் அழகுறும்
என் நிலாக்கூடம்..!!

வீதியில் வெள்ளத்தின்
தேரோட்டம்....!!
வானத்தில் மேகத்தின்
நீராட்டம் ... !!
என் காதலி கண்களில்
ஒரு போராட்டம்....!!
அவள் கால்களோ மண்ணில்
மயிலாட்டம்....!!

எனை மறந்தே
போனேன்..
அவள் அழகில்
நனைந்தே போனேன்..
மழையால் நான்
உருகி போனேன்..
அவள் ஸ்பரிசத்துக்காய்
உறைந்தே போனேன்..

மழையோ என் தவிப்பை
புரிந்து கொண்டாள்..
மேகமோ தன்னவனை
முட்டி கொண்டாள்...
சத்தத்தால் என்னவளோ
கட்டிக் கொண்டாள்...
உதட்டால் என் உதட்டை 
தொட்டு  சென்றாள்.....!!

தமிழ் நிலா