யாரோ நீ என் கனவோடு......??தினமும் வருகிறாய்
எனை தொடுகிறாய்
உன் இதழ்களால் என்
முகம் துடைக்கிறாய்....!!

உள்ளம் திறக்கிறாய்
வெக்கம் போக்கினாய்
என் போர்வைக்குள்ளே நீ
பதுங்கியே படுக்கிறாய்...!!

இதயத்தில் நடக்கிறாய்
நெஞ்சினில் குதிக்கிறாய்
நீ போன பின்னும்
எங்கும் தெரிகிறாய்.....!!!

விழிகளில் ஆடுகிறாய்
வார்த்தைகளால் பாடுகிறாய்
நான் எழுந்து விட எங்கே 
மறைந்து போகிறாய்.....!!

தமிழ் நிலா