நீ இல்லை....!!எனக்காக வாழ
நீயும் இல்லை...
என்னோடு வாழ
நீ எங்கே இல்லை...

உன்னோடு பேச
வார்த்தைகள் இல்லை...
உன்னோடு பேச
எனக்கு வழியும் இல்லை..

உன்னை எழுத
மொழிகள் இல்லை...
மொழிகள் எழுத
நான் கவிஞனும்  இல்லை..

உன்னை பாட
கவிகள் இல்லை...
கவிகள் பாட
நான் கலைஞனும்  இல்லை...

உன்னை ரசிக்க
விருப்பம் இல்லை..
விரும்பி ரசிக்க
நான் கணவனும் இல்லை....

தமிழ் நிலா