"அப்பா " எந்நாளும் என் முகவரி தான்..

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்


தமிழ்நிலா

என் உயிர் கவிதை...


அன்பே
அழகெல்லாம்
அசந்து போகும்
அழகி நீயடி...!!


ஆருயிரே - என்
ஆயுள் - உன்
ஆயுளின்
ஆழத்தில் உள்ளதடி.....!!


இளையவளே
இனியவளே - உன்னால்
இனிமயனதடி
இன்று என் வாழ்வு...!!


ஈன்ற தாயின்
ஈகையும் - காதலை
ஈன்ற உன்
ஈகையும் எனக்கொன்று...!!


உயிரே என்
உயிராய்
உள்ளவளே என்
உயிரில் கலந்துவிட்டாய்...!!


ஊமை என்னை
ஊஞ்சலில் ஆடவைத்த என்
ஊதாப்பூவே நாம்
ஊர் போற்ற வாழ்வோம் வா...!!


எந்தன்
எதிர்காலம் நீ
என தெரியாமல்
என்னை இழந்துவிட்டேன்..!


ஏன் இந்த வாழ்க்கை என
ஏங்கிய போது நீ வந்தாய்
ஏழை நான் உன்னால்
ஏழு உலகமும் பெற்றேன்...!!


ஜம் பூதம் ஆளும்
ஜநிலங்கள் வாழ்த்தும்
ஜம் பொறியோடு வரும் நீ என்
ஜம் புலனில் உலவுகிறாய்....!!


ஒருவனுக்கு
ஒருத்தியாய் வாழ்வோம்
ஒரு நாள் வருவான்
ஒளியாக எம் பிள்ளை...!!


ஓவியமே உன்னை எண்ணி
ஓயாமல்
ஓடி என் இதயம்
ஓய்வின்றி துடிக்கிறது...!!

ஒள
ஒள என கெளவிடும்
ஒளடவ ராகமே
ஒளவையின் தமிழே
ஒளடதமதடி உன் அன்பு...!!

BY தமிழ்நிலா


நீ தான் என் சுவாசம்...


1
எத்தனையோ காதல்கள்
என்மேல் - எனக்கு 
உன்மேல் மட்டுமே காதல்..

2
முட்கள் நிறைந்த
என் வாழ்க்கையில்
நீ மட்டும் எப்படி ரோஜாவாக...??

3
நீல வானத்தில்
நிலவினை போல - என்
நீள கனவினில் நீயடி..

4
காதல் தேசத்து
அகதி நான்..
உன் காதலன் என்று
கைது செய்தாய்..

சிறை எனக்கு அல்ல
உனக்கு
என் இதயத்தில்...!!

5
சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
உன் கண்களில் தான்....

6
என் கிறுக்கலை கவிதை
என்பவள் நீ...
கவிதைக்குள் இருப்பவளும் நீ...

7
உந்தன் புன்னகையே
எந்தன் முகவரி....
அதனால் தான் என்னவோ

நான் தொலையாமல்
இருக்கிறேன்....

8
இரவினில் கூட
உன்னைப்பார்க்கிறேன்...
கண்களால் அல்ல
கனவுகளால்....

9
என் ஆதிமுதல்
அந்தம் வரை
உனக்கு அத்துப்படி
அது எப்படி...

என் ரகசிய உலகத்தின்
அரசியா நீ?

10
உன் வியர்வையை
துடைத்துவிடு...
தங்கத்தில் இருந்து முத்தென்று
தங்க வியாபாரிகள்
வரப்போகிறார்கள்...

11
பூக்கள் உன்னை பார்த்து
பேசிக்கொள்கின்றன

தினம் நாம் பூத்து
உதிர்கிறோம்
இவள் உதட்டில்
உதிர்ந்தால்
பூத்துவிடலாம் என்று..

12
சூரியனை மட்டும்
சுற்றும்
சூரிய காந்தி போல்
உன்னை மட்டுமே
நான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்...

13
காதல் மோட்சம்
அடைவதற்காய்
என்னிடம் உள்ள
ஒரே மந்திரம்....

உன் பெயர் தான்...

14
உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்று கண்டு பிடிப்பதற்குள் 
கூடிக்கொண்டே போகிறது

உன்மேலான என் காதல்....

15
இதயத்தை தொலைத்துவிட்டு 
தேடினேன்
கிடைக்கவில்லை...
இதயமே என்னை
தேட தொடன்கியது...

உன் காதல் வந்தபிறகு..

16
காகிதங்களை காலம்
தின்றுவிடும் என்பதால்..

உன் நினைவுகள் எல்லாம்

என் மன டைரியிலே...

17
தினமும் இரவில்
தோற்றுப்போகிறேன்...

கனவில் வரும் - உன் 
நினைவு போராட்டங்களுடன் 
போராடி...

18 
உனக்கு நான்...
எனக்கு நீ...
நமக்கு நாம் ..

இதில் உனக்கு அதிகம்
எது பிடிக்கும்...!!

19
என் கவிதைகளை நீ
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்

என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...

20
நீ
தனிமையை விரும்புகிறாய்
நான்
தனிமைப்படுத்தப்படுகிறேன்..
நாம்
சேர்ந்ததால் தனிமை
தனிமையாகி விட்டது போலும்...

21
காற்றின் உருவம்
தெரிவதில்லை...
உன் காதலில்
குறையை கண்டதில்லை...

22
என் வார்த்தைகள்
எல்லாம் மௌனவிரதம்
இருக்கின்றன..

நாம் கண்களால் 
கதைத்து விடுவதால்...

23
உன் உதடுகளில் தான்
என் புன்னகை
மலர்கிறது...

கண்களில் கண்ணீர்
வராதவரை....

24
எனக்கு மனைவியாக
(வர) தட்சணை
எவ்வளவு கேட்பாய்...??

25
முத்திரையாக
இதயத்தை ஒட்டி...

காதல் கடிதங்களாக
கவிதைகளை அனுப்புகிறேன்....

உன் பதில் என்ன
காதல் தானே...?


மேலதிக கவிதைகளைப் பார்வையிட..

ஒருமனிதனின் கவிதைகள்

மேலதிக கவிதைகளைப் பார்வையிட.. ஒருமனிதனின் கவிதைகள்

பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..
காதலர் தினம் 2013

 By- தமிழ்நிலா
 Music Credit- U1

S.A.N Pictures வழங்கும், நம்மூரு தெருவோரம்...

S.A.Nilaan இன் தயாரிப்பில், S.A.N Pictures வழங்கும், நம்மூரு தெருவோரம்...


தென்மராட்சியின் வரலாற்றில் இன்னும் ஒரு தடமாக பதிகிறது  நம்மூரு தெருவோரம்...பாடல். S.A.N Pictures S.A.Nilaan இன் முயற்சியில் உருவாக்கி இருக்கும் முதல் பாடல், யாழ் மண்ணுக்கு தென்மராட்சியில் இருந்து சமர்ப்பணம்.

தொலைந்து போகிறது மனது..


தொலை தூரத்தில்
உன் குரல்
தொலைபேசியில்
கேட்கையில் தொலைந்து
போகிறது மனது...

தேவதை ஒருத்தி பூமிக்கு
இறங்கிவந்து என்கூட
பேசுவது போல்
எப்படி உன்னால் மட்டும்
இப்படிப் பேசமுடிகிறது..
என் கனவு தேசத்து
ராணியே..

தொலைபேசி அலாரத்தை விட
அதிகமாக அடிக்கிறது
என் இதயம்...
நீ தான் அழைப்பில் என்று
தெரிந்தபின்...

தொலை தூரத்தில் இருந்து வரும்
உன் குரல் கேட்கையில்
தொலைந்து போகிறது
எப்படியோ மனது...

தமிழ்நிலா  23-11-2012 11.00pm 

துடித்துக்கொண்டு இருப்பதால்....என் இதயத்தை உன்னிடம்
வைத்துக்கொண்டு நீ
காதலிக்கவில்லை
என்கிறாயே...

உன் வாழ்க்கையில் ஒரு
நொடியாவது என்னை
நினைக்காமல் கடந்திருப்பாயா..??

உன் கனவில் எங்கோ ஒரு
மூலையிலாவது நான்
வந்ததில்லையா...??

உன் நினைவுகள் என்னும்
அலையில் சிக்கிவிட்டேன்..
மூச்சு முட்டுகின்றது...
ஆனால்
இறக்க மாட்டேன்...
எங்கோ இருக்கும்
உன் இதயம்
துடித்துக்கொண்டு இருப்பதால்....

யார் நீ...


உன் சிரிப்பால்
என்னை அதிர வைத்தாய்...
உன் பேச்சால்
என்னை உருக வைத்தாய்...
உன் பார்வையால் 
என்னை மயக்கி விட்டாய்...
உன் பாசத்தால்
என்னை உறைய விட்டாய்...

உன் நடையில் என்னை
தவிக்க விட்டாய்...
உன் இடையில் என்னை
துடிக்க வைத்தாய்...
உன் மார்பில் என்னை
மறைத்து வைத்தாய்...
உன் அழகில் என்னை
நனைய வைத்தாய்....


ஒருமுறை பார்ப்பதால் தோன்றும்
இதய தவிப்புகளை நீ அறிவதில்லை
உன்னை பார்க்க தூண்டும் ஆசையை
என்னால் மறைக்க முடியவில்லை...


நீ பிரமனின் மகளா...- என்னை
அழகால் மயக்குகிறாய்...
நீ இயமனின் மகளா..- என்னை
அழகால் கொல்கிறாயே...

தமிழ்நிலா 

இசை தீ
அழகே எந்தன் உயிரே...
நிலவே உயிர் நிலவே...
உலகாளும் இசை தீயே..
எனையாளும் தமிழ் தாயே..

இரவினில் கூட உன்னைப்பார்க்கிறேன்...
இசையினை கொண்டு கவிபாடினேன்..
காலையில் நேற்றும் தடுமாறினேன்..
காதலை கொண்டு உனை மீட்கிறேன்..

கவிதையில் ஹைஹூ நான்தானடி...
ஸ்வரங்களில் எல்லாம் நீதானடி...
ஒருவரி முதல்வரி கவி நானடி
முழுவதும் அடக்கிடும் பொருள் நீயடி..
பல்லவி கொண்டு நடந்தேனடி
சரணங்கள் செய்து வந்தாயடி....
உன் அழகை பாட வார்த்தை ஏதிங்கடி..
உன் சினுங்கல்கள் எல்லாம் இசைதானடி...

ஆ....ஆ....ஆ ...  நீ வா வா வா.... ஒரு முத்தம் தா தா தா.....
உயிர் வரை போ போ போ....  நீ நீ..... என்னை கொல்லடி...

தமிழ்நிலா 

தொலைந்து விட்டாள்தொலைந்து விட்டாள்
என்னவள்..
தேடவிட்டாள் அவளிடமே

காதல் கலந்த முகங்களில்
கவலை படர்ந்திருந்தது...
நான் வாழும் இதயத்தில்
சோகம் தவழ்ந்திருந்தது...

என்னவள் இவள் அல்ல...

கொஞ்சும் வார்த்தைகள்
குத்தி நின்றது...
கூரான பார்வைகள்
கோவித்து கொண்டது...

இவளும் அவள் அல்ல...

கொலிசு ஒலிக்கவில்லை..
வளையல் ஓசையும் கேக்கவில்லை..
கூந்தல் வாசம் மணக்கவில்லை..
எப்படி தேடுவது..
தேடி தொலைகின்றேன்...
எங்குமே இல்லை...அவள்..
எங்கோ போய்விட்டாள்...

கடைசியாக..
புன்னகை நிறத்தில்
சந்தோஷ ஆடை அணிந்திருந்தால்...
கையில் சில வேளைகளில்
என் இதயத்தை வைத்திருப்பாள்...

கண்டவர்கள்..
என் உயிருடன்
தொடர்பு கொள்ளுங்கள்...
விலை உலகானாலும் தருகிறேன்..

தமிழ்நிலா

வா வா அன்பே .....

வா வா அன்பே
வா வா அருகிலே
உன் வருகைக்காய்
காத்திருக்கிறேன்
நான் உருகியே....

தினம் நட்சத்திரம்
எண்ணியே கழிந்தது
நாட்களே..
நெஞ்சில் உந்தன்
காதல் முட்டியே
வழிந்ததே....!!

உன் புகைப்படம் பார்த்து
பார்த்து தொலைந்தது என்
நொடிகளே...
நிலவினை பார்த்து
பார்த்து கழிந்தது என்
இரவுகள்....

உன் கண்ணில் என்ன
வைத்தாய்... அது மாயம்
செய்யுதே... உன்
நெஞ்சில் என்னை வைத்தாய்
காதலில் மூச்சு
முட்டுதே..... !!!!

நீ தரும் முத்தத்தால்
அந்த சத்தத்தால் என்
இதயம் துடிக்குதே...
தினம் வரும் கனவினால்
கண்கள் யுத்தத்தால். ...
என் உயிர் வாழுதே..

உன் அன்பால் தனிமையை
மறக்கிறேன்...
உன் நினைவால் தனிமையை
இழக்கிறேன்..
நீ வந்தால் தானே நான்
நானாவேன்.... வா வா அன்பே...

by- தமிழ் நிலா... 

இரவும் நிலவும்...


நிலவில் இரவா, இரவில் நிலவா
தெரியவில்லை
கருமை அழகா பொன் மேனி அழகா
புரியவில்லை

நிலவினை பெண் என
பார்த்திடும் போது
அவள் கூந்தலின் கருமை
இரவாய் போனதுவோ....

ஒரு நிலவால் என் வாழ்வில்
இரவா தெரியவில்லை
தமிழ் நிலவால் என் உயிருக்கு
ஒளியா புரியவில்லை....

அவள் கண்கள் இரண்டும்
நிலவாய் போனால் கண்
இமைகள் தான் இரவாகும்,
பொன் மகள் என்னை பாராவிட்டால்
என் வாழ்வு முழுதும் இரவாகும்..

தமிழ் நிலா

விம்பம்..........

உன்னை பார்க்கும் போது
உன் கண்ணில்
என் விம்பத்தை பார்த்தேன்....
அதனால் ....
காதலி என்று எண்ணி விட்டேன்...
உன் பதிலின் பின்புதான் தெரிந்தது,
கண்ணாடி கூட விம்பம் காட்டும் என்று....

நீ என் காதலியாக வர வேண்டும்...........உன்னை பார்த்து கவிதை எழுதினேன்
உன் சிரிப்பில் இசையை அறிந்தேன்
உன் நடையில் தாளம் கேட்டேன்....
உன் மூச்சில் ராகம் உணர்ந்தேன்...

உன் கண்ணில் சுரங்கள் பார்த்தேன்..
உன் இதயத்துடிப்பில் மெட்டமைத்தேன்
உன் உதட்டில் சுருதி போட்டேன்
உன் இடையில் இசை அமைத்தேன்...

உன்னால் நான் ஒரு கலைஞன் ஆனேன்.....
நான் இசைப்புயலாக வர ஆசை இல்லை
நீ என் காதலியாக வர வேண்டும் என்பதே
என் ஒரு ஆசை................???

உன் நினைவு...உதிக்கும் சூரியன்...
உயிரணுவில் ஒரு மாற்றம்...

காலம் தப்பாத மழை...
செடிகளின் அணிவகுப்பு...

வீதியில் புகை மூட்டம்...
புல்வெளியில் படரும் பனி...

அலையடிக்கும் குளம்...
மொட்டவிள்கும் தாமரை...

சுழன்று வீசும் காற்று...
மணம் பரப்பும் தோட்டத்து மல்லிகை...

அசையும் மேகம்...
இசையமைக்கும் வானத்து பட்சிகள்...

இலையுதிர்க்கும் மரங்கள்...
நடைபயிலும் வனத்து மிருகங்கள்...

கடக்கும் காலை...
கரையும் காலம்...

என் மெய் தீண்டும் விழியாலே...

துடிக்கும் இதயம், அதில்
துங்கும் உன் நினைவு...

தமிழ் நிலா 

உன்னை நீ காதலி ....கவிதை எழுத
ஆசையுடன் உட்கார்ந்தேன் 
வார்த்தைகள் வருவதாய் இல்லை,


கவிஞனுக்கு தான்
கவிதை வருமாம்.. இது
காதலி சொன்னது..

கவிஞன் ஆக
காதலிக்க வேண்டுமாம்- இது
நண்பி சொன்னது...

யாரை நான் காதலித்தால்
கவிதை எழுதலாம் என்றேன்..
உன்னை நீ காதலி என்றாள்
மனைவி...!!! 

by sanjay தமிழ்நிலா

என்னவளே...என்னவளே...
காதலில் தானடி
சொன்னாலும் 
தோல்வி..
சொல்லாவிட்டலும் 
தோல்வி..
அதை இங்கு 
சொல்கையிலே 
காதல் கனக்கும்,
சொன்னபின்னாலே
கண்ணீர் சுரக்கும்,
செத்து செத்து
இதயம் பிழைக்கும்,
சாவதை மட்டும்
வெண்மனம் நினைக்கும் ,
இது தான் காதலின்
சாபமோ..
இனி காணாமல் போகும் 
ஆணிணமோ....??

மாலைநேர மழைத்துளிஏதாவது வித்தியாசமா எழுதுவம் என்று நினைத்தேன். தூக்கம் வந்த படியால் சின்ன பதிவு போடலாம் என்பதற்காய் பதினைந்து  நிமிடத்தில் எழுதியது இந்த கவிதை (போன்ற ஒன்று), திரையில் மலர்ந்த படங்களில்  என் ஞாபகத்தில் இருந்தவற்றை பயன்படுத்தியுள்ளேன்.. என்னவளே 
ஆசையில் ஓர் கடிதம்..

நானே என்னுள் இல்லை.
இனியவளே 
கண்டேன் காதலை 
நினைத்தேன் வந்தாய் 
மறுபடியும் ஒரு காதல்  
எப்படி மனசுக்குள் வந்தாய்..

தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன்
காதல் சொல்ல வந்தேன் 
காதல் கொண்டேன்...

யாரடி நீ மோகினி
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஆனந்த பூங்காற்றே 
அலை பாயுதே
ஆசைகள்..
கண்ட நாள் முதல்

அன்பே ஆருயிரே
எனக்கு 20 உனக்கு 18 
என் சுவாசக் காற்றே 
பூவெல்லாம் கேட்டுப்பார் 
முப்பொழுதும் உன் கற்பனையே

செல்லமே 
அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறது
உயிரே 
உன்னை பாக்கணும் போல இருக்கு..
கண்ணாமூச்சி ஏனடா 
பிரியமானவளே
தவமாய் தவமிருந்து 
ராமன் தேடிய சீதை நீ..
மயக்கம் என்ன
மைனா 
நெஞ்யிருக்கும் வரை 
நீயே என் காதலி 

எங்கேயும் காதல் 
சொல்ல சொல்ல இனிக்கும்
வாரணம் ஆயிரம் உன்
மந்திரப் புன்னகை...

அழகி 
ஆசை வைச்சேன் 
ஒரு கூடை முத்தம் 
தா
எங்கேயும் எப்போதும் 
நினைத்தாலே இனிக்கும்
தொட்டால் பூ மலரும்..
துள்ளத மனமும் துள்ளும்....

உச்சி தனை முகர்ந்தால்
சர்வமும் ரோஜாவனம் 
கண்களாலே கைது செய் 
அன்பே
உன்னை பார்த்தாலே பரவசம் 
கன்னத்தில் முத்தமிட்டால்
உன்னாலே 
நெஞ்சில் ஜில் ஜில்

நான் அவன் இல்லை 
அஞ்சாதே
உனக்காக என் காதல்- 
நிலவே வா 
உன்னாலே உன்னாலே
காதல் சடு குடு
வாகை சூட வா 
ஜெயம் உண்டு பயம் இல்லை
நீ வேணும்டா செல்லம் 
விண்ணை தாண்டி வருவாயா 
என் செந்தூரப் பூவே..

பிரியமுடன்
காதலன் 
காதல் கிறுக்கன்
(தமிழ் நிலா )

மறக்காமல் உங்கள் கருத்துகளை கூறுங்கள்...

காதல் கொலைகாரி..!!என் காதலில்
இனிய விஷம் - என்
காதல் தேவதை
உன் நினைவுகளே...!!!
என்னை சிறுக சிறுக
கொல்வதால்.... நீயும்
காதல் கொலைகாரி..!!
நீ தருவது ஆயுள்
தண்டனை என்றால்...
உன் இதயத்தில் நான்
காதல் கைதியாகிறேன்..
உன் கையாலே
மரணம் என்றால்...
அது கூட எனக்கு சுகமே...
எதனையும்
ஏற்றுக்கொள்கிறேன்..
கண்கள் செய்த
தப்பினால்....
உன்னை காதலித்த
குற்றத்துக்காக....!!
கண்ணீருடன்.....!!!

+9477@காதல்.com

நான் வாழும் உலகத்தில்
நீ வாழ்ந்தும் - உன்னை
பாக்க முடியவில்லை....
என்னிடம் phone இருந்தும்
call பண்ண உன்
number இல்லை.....

மேகம் மண்ணுக்கு வர
முடிவதில்லை - மழையை
அனுப்புகிறது தூதாக...
நான் வர முடியவில்லை
நீ ஒரு mail ஆவது
அனுப்பேண்டீ எனக்கு.....

புயல் அடித்து புல்லு
சாய்ந்திட மாட்டாது - அன்பே
நீ வெறுத்தாலும் காதல் சாகாது...
facebook இல் நீ இருந்தும்
என்னால் chat பண்ண
முடியவில்லை....

தண்டவாளம் சேருமா...??
நீ என்னை நெனைக்காம - என்
காதல் ஜெயிக்குமா???
ஒரு கடிதம் போடகூட
உன் address ய் நீ
தரவும் இல்லை...

by - தமிழ் நிலா

வெள்ளி மலரே.....வெள்ளி மலரே எந்தன் உயிரே
வில்லாய் நீ மாறி காதல்
அம்பை வீசினாய்....உன்
அன்பாலே நான் வாழ்க்கையின்
அர்த்தம் உணர்ந்தேனே...

அன்பே என் நெஞ்சில் எல்லாம்
நீ  வந்த காலின் தடம்
நிலவே நீ வந்தால் போதும்
தடைகள் கூட படியாய் மாறுமடி.

என் கண்ணீர் துடைக்க
கைகள் கேட்டேன் மேல்.தாங்கி
தோழாய் நின்றாய் காதலியே..
என் விழியோரம் வழியும் கண்ணீர் 
உன் கண்ணோடும் வழிகிறதே
உறக்க மறுக்கும் கண்கள் கூட
தாயென உன் மடி தேடுகிறதே....

உயிரே உன் நெஞ்சுக்குள்ளே.
என் மூச்சு உள்ளதடி
பெண்னே உன் கண்ணுக்குள்ளே
என் உயிர் தான் வாழுதடி..
கண்ணே உன் கண்மணிக்குள்ளே
சுத்துதடி என் உலகம்
பெண்னே உன் பொன் விழி தானடி.
எந்தன் பூவுலகம்.....

என்..நெஞ்சோடு..காதலியாய்
நீ..மட்டும் போதுமடி –அன்பே
என் காதல் தானாய் வளருமடி...

தமிழ் நிலா

காற்றுவெளி June 2011 

நண்பர்களுக்கு வணக்கம்...!!

எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், தமிழ் நிலா, சஞ்சய் எனும் பெயர்களில் எழுதுவதை, அவற்றின் பெயர்களை நீக்கி தங்களுடயதகவே இடுகிறார்கள்.. என்னால் பெயர் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில உத்தமர்கள் மட்டுமே என்னை கேட்டு அதுவும் அதே பெயருடன் பதிகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மேலும் நான் சில நண்பர்களை வினாவ அவர்கள் தொடர்பை துண்டிக்கிறார்கள்.. ஏன் என புரியவில்லை.. அவர்களை பெயர் இட்டு குறிப்பிட விரும்ப வில்லை. "காதல் சாரம்" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு விடயம் அநேகரின் முகப்புத்தக பகுதியில் காண்கிறேன். அவற்றில் அநேகமானவற்றில் பெயர் நீக்கப்பட்டுள்ளது..

இதை எங்கு கண்டாலும் தெரியப்படுத்தவும்...

முகபுத்தக நெருங்கிய நண்பர்கள் இனிமேல் கவிதைகளை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளர்கள். அத்துடன் இவாறு நடப்பதை தெரியப்படுத்திய நண்பர்களுக்கும்.. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கி விமர்சனங்கள் தந்து ஊக்குவித்த அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...

நன்றி


காதல் சாரம்...

யாரை நீ காதலித்தாயோ 
அவள் வேறொருவனை காதலித்தாள்.
யாரை நீ காதலிக்கின்றாயோ
அவள் வேறொருவனை காதலிக்கின்றாள்.
யாரை நீ காதலிக்க போகிறாயோ
அவளும் வேறோருவனையே காதலித்திருப்பாள்.
உன்னுடையது எதை இழந்தாய்
ஏன் தாடி வளர்க்கிறாய்
யாரை நீ கொண்டு வந்தாய்
அவளை நீ காதலிக்க
யாருக்கு நீ காதலை சொன்னாய்
அவள் உன்னை காதலிக்க
யார் உன்னை காதலித்தாள் 
நீ மீண்டும் காதலிக்காமல் இருக்க
காதலை எங்கிருந்து பெற்றாய் 
அது இங்கேயே பெறப்பட்டது
யார் என்று உன் காதலியோ
அவள் நாளை
மற்றொருவனுடையதாகின்றாள் 
மற்றொரு நாள் அவள் வேறொருவனுடையதாகின்றாள்.

இதுவே காதலின் நியதியும்

சாரமும் ஆகும்.

தமிழ் நிலா

2005/07/16